UPDATED : மே 06, 2026 08:51 PM
ADDED : மே 06, 2026 08:41 PM

அவர்கள் ஊடுருவல்காரர்கள்?
லோக்சபாவில் நுழையும் ஒவ்வொரு ஆறாவது பா.ஜ., - எம்.பி.,யும் ஓட்டுத் திருட்டு வாயிலாகவே தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களை ஊடுருவல்காரர்கள் என அழைக்கலாமா? நியாயமான முறையில் தேர்தல் நடந்தால், லோக்சபாவில் 140 இடங்களை கூட பா.ஜ., பெறாது. அவர்களுக்கு தேர்தல் கமிஷன் உதவுகிறது. ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,
ஜனநாயகம் மிரட்டப்படுகிறது!
மேற்கு வங்கத்தில் துப்பாக்கி முனையில் ஜனநாயகம் மிரட்டப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகும், அதை மதிக்காமல் மம்தா அராஜகம் செய்கிறார். மக்களின் முடிவை அவர் நிராகரிக்கிறார். அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதால், தேர்தல் கமிஷன், பாதுகாப்பு படைகளின் நம்பகத்தன்மையை மம்தா சிதைக்க முயல்கிறார்.
தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சர், பா.ஜ.,
தகுதியற்ற தலைவர்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஊடுருவல்காரர்கள் என ராகுல் அழைப்பது கண்டிக்கத்தக்கது. இண்டி கூட்டணியை வழிநடத்த தெரியாத ராகுல், ஒரு தகுதியற்ற தலைவர். அந்த கூட்டணி விரைவில் உடைவதற்கு அவரே காரணமாக இருப்பார். பொதுவாக திருடர்களாக இருப்பவர்கள்தான், மற்றவர்களை திருடர்கள் என்பர். சம்பித் பத்ரா செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
