ADDED : மே 15, 2026 01:17 AM

தப்ப முடியாது! 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாரும் தண்டனையில் இருந்து நிச்சயம் தப்ப முடியாது. நம் குழந்தைகளின் கனவுகளோடு விளையாடி முறைகேட்டில் ஈடுபட்ட, 'தேர்வு மாபியா' கும்பல் நசுக்கப்படும். இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் அணுகியுள்ளது. சம்பித் பத்ரா செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
கொள்கைகளே காரணம்! தேர்தல் பிரசாரங்கள் மற்றும் பயணங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை வாரியிறைப்பவர்கள், கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில், சிக்கன நாடகத்தை அரங்கேற்றி வரு கின்றனர். கடந்த 14 ஆண்டு களில் மேற்கொள்ளப்பட்ட தவறான கொள்கைகளே, நம் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம். ஆதித்யா தாக்கரே மஹா., எம்.எல்.ஏ., உத்தவ் பால்தாக்கரே சிவசேனா
முன்னேற்றத்தின் அறிகுறி! 'பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கூறியிருப்பதும், அதற்கு முன்னாள் ராணுவ தளபதி ஆதரவு அளித்திருப்பதும் நல்ல முன்னேற்றத்துக்கான அறிகுறி. போர் என்பது ஒரு தீர்வு அல்ல. உரிய அமைதிப்பேச்சு வாயிலாக, எந்த பிரச்னைகளையும், சூழலையும் நம்மால் தீர்த்து கொள்ள முடியும். பரூக் அப்துல்லா தலைவர், தேசிய மாநாட்டு கட்சி
