தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அனைத்து கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்!

அனைத்து கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்!

அனைத்து கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்!

1


UPDATED : ஆக 08, 2026 07:18 PM

ADDED : ஆக 08, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2026 07:18 PM ADDED : ஆக 08, 2026 07:10 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா, 2026ஐ நாங்கள் நிராகரிக்கிறோம். மத்திய அரசு இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்; இல்லையென்றால் அதை பார்லி., கூட்டு குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். இந்த மசோதா குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகளுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். சுப்ரியா சுலே லோக்சபா எம்.பி., தேசியவாத காங்., - சரத்பவார் அணி

எதையும் செய்யவில்லை!

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியதும், ஜனநாயகத்தை பாதுகாத்ததும் காங்கிரஸ் கட்சி தான். நாட்டிற்கோ, நாட்டு விடுதலைக்கோ பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் எதையும் செய்யவில்லை. ஆனால், அதைச் சேர்ந்தவர்கள் தேசபக்தி குறித்து எங்களுக்கு பாடம் எடுக்கின்றனர். ஆனால், காங்., யாரையும் கண்டு அஞ்சாது. மல்லிகார்ஜுன கார்கே தேசிய தலைவர், காங்.,

மோடிக்கு நேரமில்லை!

டில்லியில் போராட்டம் நடத்திய மாணவர்களை சந்திக்க பிரதமர் மோடிக்கு நேரமில்லை. ஆனால், எங்கள் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்த துரோகிகளை அவர் சந்திக்கிறார். அவர்கள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கு மோடி அழுத்தம் தருகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. உத்தவ் தாக்கரே தலைவர், சிவசேனா உத்தவ் அணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us