
எந்த சிக்கலும் இல்லை!
உ.பி.,யில் இடைத்தேர்தல் நடக்கஉள்ள சில சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். ஆனாலும், காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். இதனால், 'இண்டி' கூட்டணிக்கு எந்த சிக்கலும் இல்லை.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
திட்டமிட்ட சதி!
ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிக்காலம், வரும் ஜனவரியில் தான் முடிவடைகிறது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பே தேர்தல் நடத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் ஓட்டுப்பதிவின் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இது, மத்தியில் உள்ள பா.ஜ., அரசின் திட்டமிட்ட சதி.
கல்பனா சோரன்
எம்.எல்.ஏ.,
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
பழி போடுவதா?
டில்லியில் என்ன பிரச்னை நடந்தாலும், அதற்கு பொறுப்பேற்க வேண்டியது, ஆளும் ஆம் ஆத்மி அரசு தான். ஆனால், டில்லி முதல்வர் ஆதிஷி, எல்லா பிரச்னைக்கும் மத்திய அரசு மீது பழி போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
நயாப் சிங் சைனி
ஹரியானா முதல்வர்,
பா.ஜ.,

