
துரோகிகளை தோற்கடிக்க வேண்டும்!
நம் கட்சியிலிருந்து பிரிந்து சென்று, நமக்கு எதிராக செயல்படுபவர்களை மக்கள் முன் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். இந்த சட்டசபை தேர்தலில், துரோகிகளை தோற்கடிப்பது பெரிய விஷயமல்ல; அவர்களை படுதோல்வி அடையச் செய்வதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.
சரத் பவார்
தலைவர், தேசியவாத காங்., சரத் பவார் பிரிவு
புத்தகத்தை படிக்கவில்லை!
காங்கிரசின் ராகுல், எங்கு சென்றாலும் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை துாக்கிக் கொண்டு செல்கிறார். ஆனால், அந்த புத்தகத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது அவருக்கு தெரியாது. அதை அவர் படிக்கவில்லை.
நட்டா
தேசிய தலைவர், பா.ஜ.,
மணிப்பூர் செல்லாதது ஏன்?
மணிப்பூர் பற்றி எரிகிறது. ஆனால், பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்று விட்டார். மணிப்பூரில் ஓராண்டுக்கு மேலாக கலவரம் நடக்கிறது. ஆனால், பிரதமர் அங்கு செல்லவே இல்லை. உலகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்பவர், மணிப்பூர் செல்லாதது ஏன்?
லாலு பிரசாத் யாதவ்
தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்

