
குழந்தை திருமணம்!
கடந்த ஆண்டு நாட்டில் 2 லட்சம் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. இருப்பினும் ஐந்தில் ஒரு சிறுமிக்கு, 18 வயதுக்கு முன்பே சட்டவிரோதமாக திருமணம் செய்து வைக்கின்றனர். இதை தடுக்க, 300 மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
அன்னபூர்ணா தேவி
மத்திய அமைச்சர், பா.ஜ.,
ஐ.நா., தலையீடு தேவை!
வங்கதேசத்தில் இஸ்கான் துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வங்கதேச பொறுப்பு பிரதமர், அடிப்படைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளார். இந்த விஷயத்தில் ஐ.நா., தலையிட வேண்டும்.
கிரிராஜ் சிங்
மத்திய அமைச்சர், பா.ஜ.,
விசித்திரமான குற்றச்சாட்டு!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு எதிராக சந்தேகம் கிளப்பியுள்ளார்; ஓட்டு சீட்டு முறைக்கு சாதகமாக பேசியுள்ளார். காங்., கூட்டணி வெற்றி பெற்ற ஜார்க்கண்டிலும் இதே இயந்திரம் தானே பயன்படுத்தப்பட்டது. கார்கேவின் குற்றச்சாட்டு விசித்திரமாக உள்ளது.
சிராக் பஸ்வான்
மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி