
தகுதியற்றவர்களுக்கு நிதி!
கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு நிதி அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேற்கு வங்க அரசு இந்த நிதியை தகுதியற்றவர்களுக்கு வழங்குகிறது. தகுதியானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது போன்று நிதியை தவறாக பயன்படுத்தினால், இந்த திட்டத்துக்கு நிதி வழங்குவதை மத்திய அரசு நிறுத்த முடியும்.
சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய அமைச்சர், பா.ஜ.,
கொதிப்பில் ஹிந்துக்கள்!
வங்கதேசத்தில் இடைக்கால அரசின் ஆட்சியில் ஹிந்து சிறுபான்மையினர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதனால் ஹிந்துக்கள் கொதிப்படைந்து உள்ளனர். மத்திய அரசு இதுகுறித்து பார்லிமென்டில் அறிக்கை அளிக்க வேண்டும்.
மாயாவதி
தலைவர், பகுஜன் சமாஜ்
ராஜினாமா செய்யுங்கள்!
டில்லியில் போலீஸ் துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டம் - ஒழுங்கை கையாள முடியாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு செல்லலாம். டில்லியில் நடக்கும் கொலை சம்பவங்களால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால்
ஒருங்கிணைப்பாளர்,
ஆம் ஆத்மி