
++6இது புதிதல்ல!
நேரு, நாட்டின் சுதந்திரத்திற்காக 13 ஆண்டுகள் சிறையில் கழித்தார். இந்திரா பாகிஸ்தானை இரண்டாக பிரித்தார். ராஜிவ் நாட்டிற்காக உயிரை தந்தார். இவர்களை எல்லாம் துரோகிகள் என்று சொன்னவர்கள், தற்போது ராகுலையும் துரோகி என்கின்றனர்; இது எங்களுக்கு புதிதல்ல.
பிரியங்கா
லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்
பா.ஜ., திட்டம் வேறு!
ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி தான் வேண்டும் என பிடிவாதமாக இருந்தால், அவர் இல்லாமல் மஹாராஷ்டிராவின் புதிய அரசு பதவியேற்பு விழாவை நடத்த பா.ஜ., திட்டமிட்டு இருந்தது. பின், பா.ஜ., மற்றும் அவர் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு துணை முதல்வராக ஷிண்டே சம்மதித்தார்.
சஞ்சய் ராவத்
ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா உத்தவ் அணி
ஹிந்துத்துவாவின் வெற்றி!
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வெற்றிக்கு ஹிந்துத்துவா சிந்தாந்தம், வளர்ச்சி பணிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான பதிலடி ஆகியவை முக்கிய பங்காற்றின. காங்கிரஸ் ஹிந்துக்களை ஒடுக்க நினைத்தது. அவர்கள் திரண்டு வந்து பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளித்தனர்.
தேவேந்திர பட்னவிஸ்
மஹா., முதல்வர், பா.ஜ.,