
கும்பகர்ணன் அரசு!
சில தினங்களுக்கு முன் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு வந்த வாடிக்கையாளர்களிடம் பேசும் போது, விலைவாசி உயர்வுடன் மக்கள் எந்த அளவு போராடுகின்றனர் என்பது தெரியவந்தது. இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு கும்பகர்ணனை போல் ஆழ்ந்த துாக்கத்தில் உள்ளது.
ராகுல்
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்,
காங்கிரஸ்
மன்னிப்பு கேளுங்கள்!
மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதன் முழுமை பெறாத வீடியோவை வெளியிட்டு பார்லிமென்டின் நேரத்தை வீணடித்த காங்கிரஸ், தற்போது நாட்டு மக்களின் நேரத்தையும் வீணடிக்கிறது. காங்கிரஸ் அம்பேத்கரை மதித்ததே இல்லை. அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தேவேந்திர பட்னவிஸ்
மஹா., முதல்வர், பா.ஜ.,
அம்பேத்கரின் கனவு!
அம்பேத்கர் கனவு கண்ட நாட்டை கட்டியெழுப்ப பா.ஜ., உழைத்து வருகிறது. அம்பேத்கருக்கு பா.ஜ., எப்போதும் உரிய மரியாதை அளித்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு சமயங்களில் அம்பேத்கரை இழிவுபடுத்தி உள்ளனர்.
யோகி ஆதித்யநாத்
உ.பி., முதல்வர், பா.ஜ.,

