தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ தேசியம்

தேசியம்

தேசியம்


ADDED : டிச 27, 2024 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2024 01:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துரதிர்ஷ்டவசமானது!

ஒடிசாவில், பிஜு ஜனதா தளம் எப்படி தோற்றது என மக்களே கேள்வி எழுப்புகின்றனர். பா.ஜ., பொய்களை பரப்பி, வெற்று வாக்குறுதிகளை அளித்து, பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. அக்கட்சியின் மத்திய அமைச்சர் அமித் ஷா அம்பேத்கர் குறித்து கூறிய கருத்து துரதிர்ஷ்டவசமானது.

நவீன் பட்நாயக்

தலைவர், பிஜு ஜனதா தளம்

தவறை ஏற்காத பிரதமர்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கரை அவமதித்ததை எதிர்த்து நாடு முழுதும் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் பிரதமர் அமித் ஷாவின் தவறை ஏற்கத் தயாராக இல்லை. அவரை மன்னிப்பு கேட்கவும், ராஜினாமா செய்யவும் வலியுறுத்தாமல், ஆதரிக்கிறார்.

மல்லிகார்ஜுன கார்கே

தலைவர், காங்கிரஸ்

திறன் வளர்ச்சி முக்கியம்!

நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினியை பயிற்றுவிக்கும், 'மெஷின் லேர்னிங்' தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. அதற்கேற்ப இளைஞர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நரேந்திர மோடி

பிரதமர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us