
பெரிய விபத்தில்லை!
நான் கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடினேன். சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் கும்பமேளாவில் நீராட வருகின்றனர். அவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமல்ல. இங்கு நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் பெரிய விபத்தில்லை. அதை பலரும் ஊதி பெரிதாக்குகின்றனர்.
ஹேமமாலினி
லோக்சபா எம்.பி.,
- பா.ஜ.,
தொற்றுநோய்களை சமாளிப்போம்!
நம் நாட்டில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் உள்ளது. நோய் பரவல், புதிய வைரஸ் தோன்றுவது ஆகியவற்றை இது கண்காணிக்கிறது. இதன் கீழ் மாநிலங்களில் ஆர்.ஆர்.டி., எனும் துரித நடவடிக்கை குழுக்கள் உள்ளன. இவற்றால் தொற்றுநோய் பரவலை உடனுக்குடன் கண்காணித்து கட்டுப்படுத்த முடியும்.
நட்டா
மத்திய அமைச்சர்,
பா.ஜ.,
மத்திய அரசே காரணம்!
மத்திய அரசின் உதவியால் தான் கேரளா பிழைத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் ஏற்பட்ட வளர்ச்சி எதுவாயினும், அதை செய்தவர் பிரதமர் மோடி. கேரளாவுக்கு அவர் வழங்காத திட்டங்களே இல்லை. மத்திய அரசின் நிதியை வைத்து தான், மாநில அரசு ஊழியர்களுக்கே சம்பளம் வழங்குகின்றனர்.
ஜார்ஜ் குரியன்
மத்திய இணை அமைச்சர்,
பா.ஜ.,