
கடமையை செய்கின்றனர்!
அமலாக்கத் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் தகவல்கள் மற்றும் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டவை. எஸ்.டி.பி.ஐ., கட்சி அலுவலகத்தில் சோதனை நடந்ததும் அப்படி தான். அதற்கு மத ரீதியான காரணம் கற்பிக்கக் கூடாது. யாராவது தவறு செய்திருந்தால், சட்டம் தன்கடமையை செய்யும்.
கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர், பா.ஜ.,
துாய்மை கங்கை எங்கே?
கங்கை தாய் தன்னை அழைத்ததால் கங்கோத்ரி கோவிலுக்கு வந்ததாக மோடி கூறியுள்ளார். உண்மை என்னவென்றால், அவர் கங்கையை துாய்மை ஆக்குவேன் என கூறியதை மறந்துவிட்டார். துாய்மை கங்கை திட்டமான 'நமாமி கங்கைக்கு' 42,500 கோடி ரூபாய் செலவிடப்படும் எனக் கூறியவர், அதில் பாதியைக் கூட ஒதுக்கவில்லை.
மல்லிகார்ஜுன கார்கே
தேசிய தலைவர், காங்.,
மக்கள் தொகை சரிவு!
உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் மக்கள்தொகை சரிவை சந்தித்து வருகின்றன. ஐரோப்பா, சீனா மற்றும் ஜப்பானில் அதிகரித்து வரும் முதியோர்கள் எண்ணிக்கை சவாலாக மாறியுள்ளது. இந்தப் பிரச்னையில் நம் நாடு பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்