
நிலைப்பாட்டில் தெளிவு!
ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக உள்ளோம். அரசு கொள்கைகள் பல ஜாதி அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. அந்தந்த சமுதாய மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல் இருந்தால், அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கலாம்.
சிராக் பஸ்வான்
மத்திய அமைச்சர்,
லோக் ஜனசக்தி
ஆபத்தான அரசுகள்!
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பின் தங்கியுள்ளன. கேரளாவில் 15 --- 29 வயதினரில் 29.9 சதவீதத்தினர் வேலையின்றி உள்ளனர். பா.ஜ., ஆளும் ம.பி., குஜராத்தில் இது முறையே, 2.6 மற்றும் 3.3 சதவீதமாக உள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்காத அரசுகள் ஆபத்தானவை.
தர்மேந்திர பிரதான்
மத்திய அமைச்சர், பா.ஜ.,
மத்திய அரசே காரணம்!
ஜம்மு - காஷ்மீரில் இரண்டாம் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு சரிவடைய மத்திய அரசே காரணம். முதல் கட்ட தேர்தலில் 61 சதவீத ஓட்டு பதிவானதை, மக்கள் சிறப்பு அந்தஸ்து ரத்தை ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடு போல் காட்ட முயன்றனர். அதற்கு பதிலடியாக மக்கள் தேர்தலை தவிர்த்துள்ளனர்.
ஒமர் அப்துல்லா
தலைவர், தேசிய மாநாட்டு கட்சி

