
கூட்டணி தொடர்கிறது!
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதிக்கும், காங்கிரசுக்கும் இடையேயான கூட்டணி தொடர்கிறது; 10 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஆறு தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். இதை வைத்து வதந்தி பரப்ப வேண்டாம்.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
பிரகாசமான இடம்!
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. ஆட்சிக்கு வந்தபோது அரசு நிர்வாகம் முடங்கி கிடந்தது. நலிவடைந்த பொருளாதாரங்களில் ஒன்றாக நாடு இருந்தது. அவற்றை சீர்படுத்தி, நாட்டை பிரகாசமான இடத்துக்கு இன்று கொண்டு சென்றுள்ளோம்.
அமித் ஷா
மத்திய அமைச்சர், பா.ஜ.,
மணிப்பூர் எப்போது?
தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நுழைவாயில் என்பது, நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் தான். அங்கு கலவரம் நடந்த மணிப்பூருக்குச் செல்லாத பிரதமர், தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க லாவோஸ் சென்றுள்ளார். பிரதமர், மணிப்பூரை புறக்கணிப்பது ஏன்?
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்கிரஸ்

