
விளைவுகளை சந்திப்பர்!
பிரதமரின் கல்வி தகுதி குறித்து அவதுாறு கருத்துகளை கூறியதற்காக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார். அரசியலில் இருப்பவர்கள் விமர்சனம் செய்யலாம்; அதற்கு உரிமை உண்டு. அவதுாறு பரப்பினால் விளைவுகளை சந்திப்பர்.
ரவிசங்கர் பிரசாத்
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
வயநாட்டின் குரல்!
வயநாடு தொகுதிக்கு, பிரியங்காவை விட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. பார்லிமென்டில் வயநாடு மக்களின் குரலாக ஒலித்து, தொகுதி மக்களின் தேவைகளை பிரியங்கா பூர்த்தி செய்வார். அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.
ராகுல்
எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
அடுத்த வெற்றி!
தேசிய ஜனநாயக கூட்டணி ஜார்க்கண்ட் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். தே.ஜ., கூட்டணி தலைமையில் வலுவான புதிய அரசு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் கட்சிக்கு ஜார்க்கண்டில் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது திருப்தியளிக்கிறது.
சிராக் பஸ்வான்
மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி

