
சதியின் புதிய முயற்சி!
ஹரியானா பா.ஜ., அரசை தொடர்ந்து, காங்கிரஸ் அரசும், கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் தலித்துகளை பிரிக்கும் வகையில் புதிய உள் ஒதுக்கீட்டை அவசர அவசரமாக அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இது, இடஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்யும் இரு கட்சிகளின் தொடர் சதியின் புதிய முயற்சி.
மாயாவதி
தலைவர்,
பகுஜன் சமாஜ்
அரசியல் லாபம்!
கர்நாடவில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடப்பதால், தலித் சமூகத்தினருக்கான உள்ஒதுக்கீடு விஷயத்தை, காங்கிரஸ் அரசு தற்போது கையில் எடுத்து உள்ளது. அரசியல் லாபம் கருதி இந்த பிரச்னையை கையில் எடுத்துள்ளனர். தலித் மக்கள் மீது உண்மையில் அக்கறை இருந்திருந்தால் முன்பே இதை செய்திருக்கலாம்.
விஜயேந்திரா
தலைவர், கர்நாடக பா.ஜ.,
காப்பாற்றும் கூட்டணி!
செபி போன்ற நாட்டின் முக்கியமான அமைப்புகள், பா.ஜ., ஆகியவை அதானியை காப்பாற்றும் கூட்டணியாக உள்ளன. இவர்களுக்கு இடையே இருக்கும் உறவு, அதானியை எல்லா துறைகளிலும் தனித்து கோலோச்ச உதவி செய்கின்றன. இதனால், நம் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு ஆபத்து.
ராகுல்
எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்

