
பொய் பரப்பாதீர்!
பா.ஜ.,வின் மக்கள் விரோத கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. நாட்டு மக்கள் சந்திக்கும் உண்மையான பிரச்னைகளான விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை குறித்து வரும் தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் பேச வேண்டும். அதை விடுத்து பொய்களை பரப்பக்கூடாது.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்
பா.ஜ.,வை ஆதரிப்பர்!
ஜார்க்கண்டில் ஆட்சியில் உள்ள ஜெ.எம்.எம்., மற்றும் காங்கிரஸ் அரசு, பழங்குடியின மக்களின் பாரம்பரியம், நிலம், வாரிசு, உணவு ஆகியவற்றுக்கு ஆபத்தானதாக உள்ளது. முஸ்லிம்களை தாஜா செய்யும் இந்த அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். அவர்கள் பா.ஜ.,வை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.
சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய அமைச்சர், பா.ஜ.,
மக்கள் பணிக்கே ஓட்டு!
அரசியலை சதுரங்க விளையாட்டு போல கையாண்டவர்கள் காணாமல் போய்விட்டனர். இன்றைய ஜனநாயகத்தில் தலைவர்களை, அவர்கள் செய்த சேவை அடிப்படையிலேயே தேர்தலில் மக்கள்அங்கீகரிக்கின்றனர். மற்றவற்றை பார்ப்பதில்லை.
சிவகுமார்
கர்நாடக துணை முதல்வர்,
காங்கிரஸ்