
சும்மா விடமாட்டோம்!
மணிப்பூரின் ஜிரிபாமில் மூன்று அப்பாவி குழந்தைகள் மற்றும் மூன்று அப்பாவி பெண்கள் கூகி கிளர்ச்சியாளர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட காட்டுமிராண்டி செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த செயலில் ஈடுபட்டவர்களை பிடித்து, தண்டனை பெற்றுத் தரும் வரை ஓயமாட்டோம்.
பைரேன் சிங்
மணிப்பூர் முதல்வர், பா.ஜ.,
முஸ்லிம் எதிர்ப்பு கோஷமா?
யோகி ஆதித்யநாத்தின் 'பிரிவினை அழிவை உண்டாக்கும்' எனும் கோஷம் முஸ்லிம்களுக்கோ அல்லது பிற சிறுபான்மையினருக்கோ எதிரானது அல்ல. பயங்கரவாதத்திற்கு எதிரானது. இந்தியர்களாகிய நாம் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டும். ஜாதி, மதம், மொழிகளை கடந்து உயர வேண்டும்.
நிதின் கட்கரி
மத்திய அமைச்சர், பா.ஜ.,
ராகுலுக்கும் தொடர்பு!
பிட்காயின் எனப்படும் மெய்நிகர் கரன்சி மோசடியில் தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணியின் எம்.பி., சுப்ரியா சுலே ஈடுபட்டது தற்போது வெளியான அவரது ஆடியோ பதிவுகள் வாயிலாக தெரிகிறது. 235 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மோசடியில் ராகுல் மற்றும் சோனியாவுக்கும் தொடர்பு உள்ளது.
சம்பித் பாத்ரா
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

