
பா.ஜ., அரசின் சதி!
உத்தர பிரதேச அரசு, முக்கிய அரசு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விளம்பரம் தந்துள்ளது. இந்த முயற்சி, பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினருக்கு எதிரான பா.ஜ., அரசின் பொருளாதார சதி. இது, அரசியலமைப்பு தந்துள்ள இட ஒதுக்கீடு உரிமையை பறிக்கும் செயல்.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
எங்களுக்கே வெற்றி!
மஹாராஷ்டிராவில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணிக்கே வெற்றி கிட்டும். ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. எங்கள் அனுபவத்தில் ஓட்டு சதவீதம் அதிகரிப்பது ஆளுங்கட்சிக்கே சாதகமாக அமையும். அந்த வகையில் எங்களின் அரசே மீண்டும் மஹாராஷ்டிராவில் அமையும்.
தேவேந்திர பட்னவிஸ்
மஹா., துணை முதல்வர்,
பா.ஜ.,
கணிப்புகளை நம்பவில்லை!
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மோசடியானவை என சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் எம்.பி., சஞ்சய் ராவத் கூறியுள்ளார். அதை நான் ஏற்கிறேன். கணிப்புகளில் காங்கிரசின் மஹா விகாஸ் அகாடிக்கு, 100க்கு மேல் சீட்டுகள் கிடைக்கும் என கூறியுள்ளனர். அதில் பாதி கூட பெறமாட்டார்கள்.
ஷைனா என்.சி.,
வேட்பாளர், சிவசேனா