
90களின் மும்பை!
நாட்டின் தலைநகரான டில்லி, 1990களின் மும்பை போல் மாறி வருகிறது. அந்த காலக்கட்டத்தில், மும்பையில் நிழல் உலக தாதாக்களின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறந்தது. தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இனியாவது டில்லி மக்களின் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
ஆதிஷி
டில்லி முதல்வர், ஆம் ஆத்மி
தேசிய கட்சி!
நம் கட்சி ஒரு காலத்தில் தேசிய கட்சியாக இருந்தது. அந்த நிலையை மீட்டெடுக்க, நாம் இப்போது கடினமாக உழைக்க வேண்டும். போராடினால் வெற்றி பெறுவோம். கட்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். டிசம்பருக்குப் பின் தேசிய மாநாடு நடத்த திட்டமிட்டு வருகிறோம்.
அஜித் பவார்
மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்.,
பட்னவிஸ் தான் முதல்வர்!
கடந்த 2014 - 19ல், மஹாராஷ்டிரா முதல்வராக பட்னவிசின் தலைமை பண்பை அனைவரும் பார்த்தனர். அவரே இந்த முறை முதல்வராக இருப்பார் என்று நம்புகிறேன். சிவசேனா உத்தவ் அணி, தனித்து போட்டியிட்டுஇருந்தால் கூடுதல் சீட் பெற்றிருப்போம் என கூறியுள்ளது. அவர்களுக்கு எப்போதும் கூட்டணியுடன் பிரச்னை.
நவ்னீத் ரானா
முன்னாள் எம்.பி., - பா.ஜ.,

