
அவகாசம் வழங்க வேண்டும்!
இந்தியா - சீனா இடையேயான உறவு குறித்து, பார்லி.,யில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். வழக்கம் போல், இதில் விளக்கம் பெற எம்.பி.,க்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இரு நாடுகளின் உறவு குறித்து விவாதிக்க பார்லி.,யில் அவகாசம் வழங்க வேண்டும்.
- ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்.,
ராஜ் தாக்கரே தேவையில்லை!
மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயின் கனவுகள் சிதைந்து விட்டன. தான் இல்லாமல், 'மஹாயுதி' கூட்டணி வெற்றி பெற முடியாது என அவர் நினைத்தார். ஆனால், அவரது முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. 'மஹாயுதி' கூட்டணிக்கு ராஜ் தாக்கரே தேவையில்லை.
- ராம்தாஸ் அத்வாலே,
மத்திய இணை அமைச்சர்,
இந்திய குடியரசு கட்சி
எந்த லாபமும் இல்லை!
பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இரட்டை இன்ஜின் அரசு இயங்குவதாக அக்கூட்டணி நிர்வாகிகள் தம்பட்டம் அடிக்கின்றனர். இதனால், மாநிலத்துக்கு எந்த லாபமும் இல்லை. சுயநலத்துக்காக கூட்டணி வைக்கப்பட்டுள்ளது.
- தேஜஸ்வி யாதவ்,
தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்