ADDED : டிச 13, 2024 11:36 PM

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக ஹிந்து கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. ஹிந்து மக்கள் வன்முறையை எதிர்கொள்கின்றனர். வங்கதேச ஹிந்துக்களை பாதுகாக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பிரதமர் பார்லி.,யில் விளக்க வேண்டும்.
உத்தவ் தாக்கரே, தலைவர், சிவசேனா உத்தவ் அணி
எனக்கு பிரச்னையில்லை!
கவர்னர் மற்றும் பல்கலை வேந்தர் பொறுப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் கவர்னர்கள், பல்கலை வேந்தர்களாக பணி செய்ய முடியாத நிலை உள்ளது. உ.பி.,யில் எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ, அதே கட்சியில் இருந்து நானும் வந்ததால், எனக்கு இங்கு பிரச்னை இல்லை.
ஆனந்திபென் படேல், , உத்தர பிரதேச கவர்னர்
பா.ஜ.,வுக்கு கண்டனம்!
பார்லிமென்ட்டில் எதிர்க்கட்சி எம்.பி.,க்களை பேச விடுவதில்லை, ஜனநாயகம் நசுக்கப்படுகிறது என கூறியதற்காக, பா.ஜ.,வினர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இழிவுபடுத்துவது கண்டனத்துக்கு உரியது. பா.ஜ.,வினரின் இதுபோன்ற செயல் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தும்.
திக்விஜய் சிங், ராஜ்யசபா எம்.பி., - காங்கிரஸ்

