
தாஜா செய்யும் அரசியல்!
டில்லியில் உள்ள கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாதந்தோறும், 18,000 ரூபாய் கவுரவத் தொகை வழங்குவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இமாம்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காத ஆம் ஆத்மி அரசு தான், தற்போது தாஜா செய்யும் அரசியலுக்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பன்சூரி சுவராஜ்
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
அதே மனநிலை!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை பார்லிமென்டில் அவமதித்தார். பா.ஜ., ஆளும் மாநிலங்களும் தலித்துகளுக்கு எதிரான அதே மனநிலையுடன் நடந்து வருகின்றன. மத்திய பிரதேசம், ஒடிசா, உ.பி., உட்பட பல மாநிலங்களில் தலித் பெண்கள் துன்புறுத்தலை சந்திக்கின்றனர்.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர்,
காங்கிரஸ்
சாதாரணமானவர் அல்ல!
நாட்டின் குறைந்த சொத்து மதிப்பு உடைய முதல்வர்கள் பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முதலிடத்தில் உள்ளார். அவரது கதை சாதாரணமானது கிடையாது. கோல்கட்டாவில் எளிய வீட்டில் இருந்து வளர்ந்த அவர், தன்னலமற்ற பொது சேவையில் நுாற்றாண்டில் யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார்.
டெரெக் ஓ பிரைன்
ராஜ்யசபா எம்.பி.,
- திரிணமுல் காங்.,

