
மக்கள் இயக்கம்!
'பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற பிரசார இயக்கம், 10 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இது, மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. அரசின் இந்த முன்னெடுப்பு, பாலின சார்புகளை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
நரேந்திர மோடி
பிரதமர்
சமூகத்திற்கு தீங்கானது!
ராஜஸ்தானில், இளைஞர்களிடையே குறிப்பாக மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இது சமூகத்திற்கு மிகவும் தீங்கானது. இந்த விவகாரத்தில் மாநில பா.ஜ., அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசோக் கெலாட்
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், காங்கிரஸ்
உடனடி நடவடிக்கை தேவை!
நம் நாட்டுக்குள் சட்ட விரோதமாக குடியேறிய ஒவ்வொரு வெளி நாட்டினரும் நாடு கடத்தப்பட வேண்டும். இது தேச பாதுகாப்பு தொடர்பானது. இந்த விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகள் பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சஞ்சய் ராவத்
ராஜ்யசபா எம்.பி., - உத்தவ் சிவசேனா பிரிவு

