தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : ஜன 29, 2025 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2025 01:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வரலாற்றை படியுங்கள் ராகுல்!

அரசியல் சட்டத்தை தன் பாக்கெட் டைரியாக கருதும் ராகுல், இந்தியாவின் அரச குடும்பங்கள் குறித்து தெரிவித்த கருத்து, அவரது குறுகிய சிந்தனையை அம்பலப்படுத்துகிறது. பல அரசர்கள் சமத்துவத்திற்கு அடித்தளம் அமைத்துள்ளனர். ராகுல், முதலில் வரலாற்றை படிக்க வேண்டும்.

ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய அமைச்சர், பா.ஜ.,

-அரசு குடும்பங்களின் துரோகம்!

இந்தியாவுடன் இணைந்ததற்காக 1971 வரை குவாலியர் அரச குடும்பம் மத்திய அரசிடம் இருந்து பல கோடி ரூபாய் பெற்றது. தேச தந்தை காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அரச குடும்பத்திற்கு சொந்தமானது. அரச குடும்பங்களின் துரோகத்தை நாங்கள் மறக்க மாட்டோம்.

பவன் கெரா

செய்தி தொடர்பாளர், காங்கிரஸ்

யாத்திரையை எதிர்ப்பாரா?

மஹா கும்பமேளாவில் புனித நீராடுபவர்களுக்கு எதிராக கார்கே கருத்து கூறியுள்ளார். 2001ல் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியாவே மஹா கும்பமேளாவில் நீராடியுள்ளார். ஹஜ் செல்வதால் வறுமை ஒழியாது என்று சொல்ல கார்கேவுக்கு துணிவு உண்டா?

ஹிமந்த பிஸ்வ சர்மா

அசாம் முதல்வர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us