
தடுத்து நிறுத்துங்கள்!
வக்பு சட்டத்திருத்த மசோதா நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நம் தேச ஒற்றுமைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த மசோதாவை பீஹார் முதல்வர் நிதிஷ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இருவரும் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
மெஹபூபா முப்தி
தலைவர்,
மக்கள் ஜனநாயக கட்சி
திசை திருப்புவதா?
என் தாய் சோனியாவுக்கு 78 வயதாகிறது. ஜனாதிபதியும் மூத்த வயதுடையவர். அந்த வகையில் 'பாவம் நீண்ட உரையை வாசித்ததால் ஜனாதிபதி சோர்வாக காணப்பட்டார்' என்று சோனியா சாதாரணமாக குறிப்பிட்டார். அவரது இந்த கருத்தை சில ஊடகங்களும், பா.ஜ.,வினர் திசைதிருப்பி விட்டனர்.
பிரியங்கா
லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்
மக்களை பலிகடா ஆக்காதீர்!
டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி படுதோல்வி அடைவது உறுதி. அதை உணர்ந்துள்ள கெஜ்ரிவால், யமுனையில் ஹரியானா அரசு விஷம் கலந்துள்ளதாக பொய்யை பரப்பினார். தன் அரசியல் ஆதாயத்திற்காக டில்லி மக்களை பலிகடா ஆக்க வேண்டாம் என அவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
பன்சூரி சுவராஜ்
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,