தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தேசியம் பேட்டி: அக். 18

தேசியம் பேட்டி: அக். 18

தேசியம் பேட்டி: அக். 18


UPDATED : அக் 18, 2026 12:00 AM

ADDED : அக் 17, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 12:00 AM ADDED : அக் 17, 2026 08:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கட்டுப்பாடு விதிப்பு!


தீபாவளி பண்டிகையில் தங்கம் வாங்க, மக்களை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக, அதன் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பண்டிகை காலத்தில் தங்கம் வாங்க கட்டுப்படுத்தும் அளவுக்கு, அரசின் கொள்கைகள் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. இது, பொருளாதார பேரழிவுக்கான ஒரு முன்னோட்டம்.
- பவன் கேரா
செய்தித்தொடர்பாளர், காங்கிரஸ்



வளர்ச்சியை ஏன் பேசவில்லை!


பார்லி., அல்லது பொதுக்கூட்டங்களில் அரசைப் பற்றிப் பேசும்போது காங்., தலைவர் ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், வளர்ச்சித் திட்டங்கள் குறித்தோ அல்லது மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்கள் குறித்து பேசுவதை ஏன் தவிர்க்கின்றனர். மாறாக, நம் நாட்டை சீர்குலைக்கும் செயல்களில் கவனம் செலுத்துகின்றனர்.
- நிதின் நபின்
தேசிய தலைவர், பா.ஜ.,



போராடும் உரிமை!


நம் நாட்டில், போராடும் உரிமை என்பது ஓர் அடிப்படை உரிமையாக உள்ளது. ஆனால், தற்போது அது ஒரு குற்றமாக மாறியுள்ளது. மக்களின் போராடும் உரிமையைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். வெளிநாடுகளில் ஜனநாயகம் பற்றி பேசும் பிரதமர், உள்நாட்டில் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறார்.
- கபில் சிபல்
சுயேச்சை ராஜ்யசபா எம்.பி.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us