
இதற்கு தான் யாத்திரை!
மத்திய பா.ஜ., அரசு மக்களின் பிரச்னைகளை பார்லிமென்டில் எழுப்ப வாய்ப்பு தராததால், பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை நாங்கள் நடத்துகிறோம். இந்த யாத்திரையில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் பற்றி மக்களிடம் விளக்குவோம்.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்
பிரதமரின் உத்தரவாதம்!
நல்ல நிர்வாகத்தை வழங்குவது மற்றும் மக்கள் நல திட்டங்களை உருவாக்குவது ஆகிய இரண்டும் பிரதமரின் உத்தரவாதமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு தேவையும், ஏதாவது ஒரு வகையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்சங்கர்
வெளியுறவு அமைச்சர், பா.ஜ.,
சர்வாதிகார ஆட்சி!
மேற்கு வங்கத்தில் விசாரணைக்கு வந்த அமலாக்கத் துறை அதிகாரிகளை திரிணமுல் காங்கிரஸ் குண்டர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் இல்லை. வட கொரியாவைப் போல் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது.
கிரிராஜ் சிங்
மத்திய அமைச்சர், பா.ஜ.,