
ராம ராஜ்ஜியத்தின் உந்துதல்!
டில்லி மாநில அரசு, ராம ராஜ்ஜியத்தின் உந்துதலால் இலவச கல்வி, சுகாதாரம், மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதிய திட்டம் மற்றும் தடையில்லாத மின்சார வினியோகம், இலவச குடிநீர் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால்
டில்லி முதல்வர், ஆம் ஆத்மி
பாதுகாக்க வேண்டும்!
தேசிய வாக்காளர் தினத்தில், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு கட்டத்தில் நாம் இருக்கிறோம். இதனால் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். அரசியலமைப்பு நிலைநிறுத்தப்படும்.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்
இறுமாப்பு கூட்டணி!
காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி, இண்டியா கூட்டணி இல்லை; இறுமாப்பு பிடித்த ஊழல் கூட்டணி. ஒருபுறம், ராமர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மறுபுறம், அசாமில் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் கலவரம் நடக்கிறது.
ஜோதிராதித்ய சிந்தியா
மத்திய அமைச்சர், பா.ஜ.,

