
பேச்சு நடத்த வேண்டும்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில், மத்திய அரசு பேச்சு நடத்த முன்வர வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மாயாவதி
தலைவர், பகுஜன் சமாஜ்
அநீதி இழைக்கும் அரசு!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கி வருகிறது; அதே நேரத்தில், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர்,
காங்கிரஸ்
கட்சி இணைக்கப்படாது!
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பிரிவு, எந்தக் கட்சியுடனும் இணைக்கப்படாது. வரும் லோக்சபா தேர்தலில், 'மகா விகாஸ் அகாதி' கூட்டணியின் ஒரு பகுதியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும்.
சுப்ரியா சுலே
லோக்சபா எம்.பி., - தேசியவாத காங்., - சரத்பவார் பிரிவு

