
கண்டனத்துக்குரியது!
விவசாயிகளுக்கு எதிரான போக்கை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு கைவிட வேண்டும். உரிமைகளுக்காக போராடும் அவர்களை, எதிரிகளை நடத்துவது போல், மத்திய அரசு நடத்தி வருவது கண்டனத்துக்குரியது.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்.,
மன்னிப்பு கேட்டேன்!
நாதுராம் கோட்சே குறித்து, நான் தெரிவித்த கருத்து பிரதமர் மோடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கலாம். இதில் என்னை மன்னிக்க மாட்டேன் என, அவர் தெரிவித்து விட்டார். எனினும், நான் பிரதமர் மோடியிடம் மன்னிப்புக் கேட்டேன்.
பிரக்யா சிங் தாக்குர்
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
தேர்தலில் தோற்பார்!
வரும் லோக்சபா தேர்தலில், மத்திய பிரதேசத்தின் குனா தொகுதியில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நிச்சயம் தோல்வி அடைவார். காங்கிரசுக்கு துரோகம் இழைத்த அவருக்கு, தேர்தலின் போது மக்கள் தக்க பதிலடி கொடுப்பர்.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்.,

