
பா.ஜ., பயப்படுவது ஏன்?
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளித்தோரின் விபரங்களை வெளியிட, பா.ஜ., விரும்பவில்லை. இதில், அக்கட்சி சொல்வதை கேட்டு, எஸ்.பி.ஐ., நடந்து கொள்கிறது. இந்த விபரங்களை வெளியிட பா.ஜ., பயப்படுவது ஏன்?
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்.,
மிகப்பெரிய அவமானம்!
சந்தேஷ்காலி குற்றவாளியான ஷாஜஹானை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைப்பதற்கு எதிராக, மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. இது மிகப்பெரிய அவமானம். ஷாஜஹானை பாதுகாக்க மம்தா அரசு முயற்சிப்பது கண்கூடாகத் தெரிகிறது.
ஹர்தீப் சிங் பூரி
மத்திய அமைச்சர், பா.ஜ.,
எம்.எஸ்.பி.,க்கு சட்டம்!
மத்தியில், காங்., தலைமையிலான அரசு அமைந்தவுடன், நாடு முழுதும் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த உத்தரவிடப்படும். மேலும், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்படும்.
ராகுல்
எம்.பி., - காங்.,

