ADDED : ஜூலை 31, 2025 11:23 PM

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, காங்கிரசுக்கு பலத்த அடி. சம்பவம் நடந்த போது ஆட்சியில் இருந்த காங்., கட்சி, வேண்டுமென்றே காவி பயங்கரவாத கட்டுக்கதையை பரப்பியது. இதற்கு அக் கட்சி தற்போது மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஸ்ரீகாந்த் ஷிண்டே லோக்சபா எம்.பி., - சிவசேனா
சவாலை வாய்ப்பாக மாற்றுங்க!
இந்தியாவை நட்பு நாடு என அழைத்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 25 சதவீத வரி விதித்துள்ளார். இதை மத்திய அரசு ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, நாடு தன்னிறைவு அடைவதற்கான வாய்ப்பாக மாற்ற வேண்டும். மேலும், பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.
மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ்
பா.ஜ., கூறுவது தவறு!
பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்தக்கூடாது; எந்த மதமும் வன்முறையை ஆதரிக்கவில்லை. ஒவ்வொரு மதமும் அன்பு, நல்லெண்ணம், உண்மை, அகிம்சையின் உருவகமாகும். ஹிந்து பயங்கரவாதம் என்ற சொல் காங்கிரசால் உருவாக்கப்பட்டது என, பா.ஜ., கூறுவது முற்றிலும் தவறு.
திக்விஜய் சிங் ராஜ்யசபா எம்.பி., - காங்.,

