
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஏப்., - ஜூன் வரையிலான காலாண்டில், எதிர்பார்த்ததை விட, 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசின் நடவடிக்கைகளே காரணம். நம் பொருளாதாரம் செத்துப் போய் விட்டதாகக் கூறியவர்கள், இந்தியா நீண்ட காலம் வாழும் பொருளாதார சக்தி என்பதை தற்போது புரிந்து கொள்ள வேண்டும்.
சிவ்ராஜ் சிங் சவுகான் மத்திய அமைச்சர், பா.ஜ.,
அரசியலாக்குகின்றனர்!
பீஹாரில், 'இண்டி' கூட்டணி கூட்டத்தில் பிரதமர் மோடியை காங்., நிர்வாகிகள் அவதுாறாக பேசியது கண்டனத்துக்குரியது. இதற்கு காங்கிரசும், ராகுலும் மன்னிப்பு கேட்காமல், இந்த விவகாரத்தை அரசியலாக்குகின்றனர். காங்., குடும்பத்தை சாராத நபர், பிரதமர் ஆனதை அக்கட்சி தலைவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஹிமந்த பிஸ்வ சர்மா அசாம் முதல்வர், பா.ஜ.,
வீட்டுக்கு அனுப்புவது உறுதி!
பீஹாரில், 'இண்டி' கூட்டணியின், 'வாக்காளர் உரிமை யாத்திரை'க்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை பார்த்து பா.ஜ., கூட்டணி பயந்துள்ளது. எங்கள் யாத்திரையை தடுக்க அக்கூட்டணி பல்வேறு சதி வேலைகளை செய்கிறது. வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி.
தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்