
தொடர்ந்து போராடுவோம்!
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் பெயரை மட்டுமல்ல, அதன் கட்டமைப்பு முழுதும் மாற்றப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் கீழ் யாருக்கு எந்தப் பணி வழங்குவது என்பதை மத்திய அரசே முடிவு செய்யும். இச்சட்டத்தை நீக்க, காங்கிரஸ் தொடர்ந்து போராடும்.
சோனியா பார்லி., குழுத் தலைவர், காங்.,
ஏன் இந்த எரிச்சல்?
ராமர் பெயரை கேட்டாலே காங்கிரசுக்கு ஏன் எரிச்சல் ஏற்படுகிறது? காங்., தலைமையிலா ன, ஐ.மு., கூட்டணி அரசு, முதலில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் என்றே பெயரிட்டது. அதன்பின், தேர்தல் காரணங்களுக்காக மஹாத்மா காந்தியின் பெயரை இத்திட்டத்தில் சேர்த்தது.
மோகன் யாதவ் ம.பி., முதல்வர், பா.ஜ.,
'புல்டோசர்' நடவடிக்கை!
'கோடீன்' இருமல் மருந்து விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, 'புல்டோசர்' நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதில், என் கட்சியினர் தவறு செய்திருந்தால் கூட பாரபட்சமின்றி தண்டனை வழங்குங்கள். இவ்வழக்கு விசாரணையில் எங்கள் கட்சியினர் மட்டுமே குறிவைக்கப்படுகின்றனர்.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி

