ADDED : ஜன 09, 2026 12:00 AM

கிராமப்புற மக்களின் வேலை செய்யும் உரிமையைப் பறித்து, கா ர்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவா ன தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்யவே, 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டம் கொண்டு வரப்பட்டுஉள்ளது. ஏழை மக்களை கொத்தடிமைகளாக்கும் இதுபோன்ற சட்டங்களை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்.
ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல்வர், காங்.,
உறுதி செய்யுங்கள்!
உ.பி.,யில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 2.89 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளதால், பா.ஜ.,வினர் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க, போலி ஓட்டுகளை உருவாக்கும் நோக்கில் அக்கட்சி செயல்படுகிறது. ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி
சட்டவிரோத நடவடிக்கைக்கு ஆதரவு!
எப்போதும் நாட்டின் நலனுக் கு எதிராக செயல்படும் நபர்களுடன் துணை நிற்பதன் மூலம், சட்டவிரோத நடவடிக்கைகளை மம்தா ஆதரித்துவருகிறார்; அரசியலமைப்பு நிறுவனங்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுகிறார். சட்டசபை தேர்தலில் மக்கள் இவற்றை கவனத்தில் கொள்வர்.
கோபால் கிருஷ்ண அகர்வால் செய்தித்தொடர்பாளர், பா.ஜ.,

