
இது துவக்கப்புள்ளி! ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், துவக்கப்புள்ளி மட்டுமே. முதலில், விற்பனை செய்ய உங்களிடம் பொருட்கள் இருக்க வேண்டும்; அவற்றை அந்த நாட்டு மக்கள் விரும்ப வேண்டும். சில துறைகளில் போட்டிகள் நிறைந்துள்ளன. நம்மிடையே சரக்குகள் கையாள்வதில் போதிய திறன் இல்லை. அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்
வெளிப்படையான விசாரணை! மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் உயிரை பறித்த விமான விபத்து குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். வெறும் இரங்கல் தெரிவிப்பதால் என்ன பயன் உள்ளது? குஜராத் விமான விபத்துக்கான விசாரணை துவங்கப்பட்டது. ஆனால், இதுவரை உண்மை வெளிச்சத்திற்கு வந்ததா? சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி., சிவசேனா உத்தவ் பிரிவு
உத்தரவுக்கு வரவேற்பு! யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவின் புதிய உயர் கல்வி சமத்துவ விதிகளுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை வரவேற்கிறேன். உண்மையான பிரச்னைகளில் இருந்து பா.ஜ., நாட்டை திசைதிருப்புகிறது. அமைதியை உறுதி செய்வதே அரசின் பணி; ஆனால், மதம் மற்றும் ஜாதியின் பெயரால் அக்கடசி தீயை மூட்டுகிறது. பிரமோத் திவாரி ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்

