
துரோகம் இழைத்த கும்பல்! திருப்பதி கோவிலுக்கு, 20 கோடிக்கும் மேற்பட்ட லட்டுகளை தயாரிக்க, 60 லட்சம் கிலோ கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது. இந்த சதிச்செயலை அரங்கேற்ற முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்., ஆட்சியில் ஒரு கும்பலே செயல்பட்டுள்ளது. இவை, அனைத்தும் தடயவியல் சான்றுகளில் நிரூபிக்கப்பட்டுஉள்ளன. சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்
நேர்மறை அரசியலுக்கு ஏற்றதல்ல! லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் அணுகுமுறை, நேர்மறை அரசியலுக்கு ஏற்றதல்ல; நம் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ள அவரது குற்றச்சாட்டு பொருத்தமற்றது. ராகுலின் கருத்தை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ராகுல், தன் மன ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்வது அவசியம். கஜேந்திர சிங் ஷெகாவத் மத்திய அமைச்சர், பா.ஜ.,
உறுதியான அடித்தளம் அமைத்தவர்! ஜனாதிபதி மாளிகையில், ராஜாஜிக்கு சிலை வைத்ததற்கு, மகிழ்ச்சி அடைகிறேன். தாராளவாத பொருளாதாரம், தொழில்முனைவோருக்கு ஆதரவு போன்ற அவரது கொள்கைகள், சமூக நீதியுடன் இணைந்தது. நம் நாகரிகத்தின் உறுதியான அடித்தளம் அமைத்தவர். சமூக வெறுப்பு இன்றி அரசியலமைப்பு உரிமைகள் மீது நம்பிக்கை கொண்டவர். சசி தரூர் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

