
வெற்றி பெறுவது உறுதி! மேற்கு வங்கத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியால் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது, பா.ஜ.,வுக்கு சாதகமாக தேர்தல் கமிஷன் செயல்படுவதை காட்டுகிறது. என் தொகுதியில் பலர் நீக்கப்பட்டாலும், ஒரு வாக்காளர் மீதம் இருந்தாலும் நான் வெற்றி பெறுவது உறுதி. மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
இந்தியாவுடன் இணையுங்கள்! நம் நாட்டில் வேகமாக வளரும் புதுமை சார்ந்த கல்வி முறையுடன் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் இணைய வேண்டும். நிச்சயமற்ற தன்மையும் விரைவான மாற்றமும் நிறைந்த இன்றைய உலகில், இணைப்பு பாலமாக கல்வி திகழ்கிறது. நட்பு நாடுகளுடன் கல்வி மூலம் உறவை மேம்படுத்த முயல்கிறோம். தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சர், பா.ஜ.,
விலகி இருக்க வேண்டும்! உத்தவ் சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்துக்கு பிரதமர் மோடியை விமர்சிக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் பிரதமர் மிகவும் வலிமையானவர்; சர்வதேச பிரச்னைகளில் இருந்து ராவத் விலகி இருக்க வேண்டும் அல்லது போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பேச்சு நடத்த வேண்டும். சஞ்சய் ஷிர்சாத் மஹா., அமைச்சர், சிவசேனா

