ADDED : ஏப் 30, 2026 01:41 AM

வன்முறைகள் குறைந்தன! மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., ஆட்சியில் வன்முறையின்றி தேர்தல் நடப்பது சாத்தியமற்றது. இந்த தேர்தலில் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையால் வன்முறைகள் வெகுவாக குறைந்தன. அதிகளவு ஓட்டுப்பதிவு நடந்ததற்கு அவர்களின் சீரிய பணியே காரணம். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மூத்த தலைவர், காங்.,
பயப்படுவது ஏன்? தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளார். இதன் காரணமாகவே, தேர்தலின் போது அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. மக்கள் தன்னை ஆதரிப்பதாக கூறும் மம்தா, பயப்படுவது ஏன் என தெரியவில்லை. பிரகலாத் ஜோஷி மத்திய அமைச்சர், பா.ஜ.,
நம்பிக்கை இல்லையா? சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிகளவு மத்திய படைகள் மேற்கு வங்கத்தில் குவிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த அதிகாரிகளும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுஉள்ளனர். ஏன், அங்குள்ள மக்கள் மீதும், பாதுகாப்பு படையினர் மீதும் தேர்தல் கமிஷனுக்கு நம்பிக்கை இல்லையா? பரூக் அப்துல்லா தலைவர், தேசிய மாநாட்டு கட்சி
