UPDATED : மே 07, 2026 09:58 PM
ADDED : மே 07, 2026 09:52 PM

பயங்கரவாதத்துக்கு எதிரான நம் நாட்டின் உறுதியான பதிலடியையும், தேசிய பாதகாப்பை பேணுவதில் உள்ள உறுதிப்பாட்டையும், 'ஆப்பரேஷன் சிந்தூர்' பிரதிபலித்தது. பயங்கரவாதத்தை தோற்கடிப்பதிலும், அதற்கு துணைபோகும் சூழலை அழிப்பதிலும், முன்பைப் போலவே அசைக்க முடியாத உறுதியுடன் இந்தியா உள்ளது. நரேந்திர மோடி பிரதமர்
முன்மாதிரி மாநிலம்!
சமீபத்தில் வெளியான சட்டசபை முடிவுகள் வாயிலாக மத நல்லிணக்கத்துக்கு ஒரு முன்மாதிரி மாநிலமாக கேரளா திகழ்கிறது. அடையாள அரசியலுக்கு சாதகமான தேசிய அளவிலான போக்குகளின் தாக்கம் ஓரளவு இருந்தபோதிலும், ஜாதி, மதத்தைவிட மனிதத்தையே முதன்மையாக பார்க்கும் மாநிலமாக விளங்குகிறது. சசி தரூர் லோக்சபா எம்.பி., - காங்.,
இரட்டை நிலைப்பாடு!
கேரள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ., வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை பாராட்டியுள்ளார். வெற்றி பெற்றதாலேயே எஸ்.ஐ.ஆர்., பணியை காங்., பாராட்டியுள்ளது. ஆனால், இந்த கருத்தை அவரின் கட்சி தலைவர் ராகுல் ஏற்க மறுக்கிறார். இது காங்கிரசின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. செஷாத் பூனாவாலா செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
