UPDATED : ஜூன் 07, 2026 09:09 PM
ADDED : ஜூன் 07, 2026 09:03 PM
UPDATED : ஜூன் 07, 2026 09:09 PM ADDED : ஜூன் 07, 2026 09:03 PM

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, அதன் நிர்வாகக் குழுவின் சொந்த முடிவுக்கும் விதிமுறைகளுக்கும் நேரடி முரணாக உள்ளது. இது, முற்றிலும் தன்னிச்சையானது; திட்டமிடப்படாதது. எனவே, இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஜெய்ராம் ரமேஷ் பொதுச் செயலர், காங்கிரஸ்
யாருடன் பங்கேற்பு?
திரிணமுல் காங்., கட்சியினர், தங்கள் சொந்த மாநிலத்திலேயே உறுப்பினர்களை தக்கவைக்க முடியவில்லை; 'இண்டி' கூட்டணி கூட்டத்தில் அக்கட்சி பங்கேற்பதால் எந்தப் பயனும் இல்லை. இதில் பங்கேற்கும் திரிணமுல் காங்., பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜியுடன், அவரது கட்சியினரே இல்லை; யாருடன் அவர் பங்கேற்பார்? திலீப் கோஷ் மேற்கு வங்க அமைச்சர், பா.ஜ.,
விலை உயர்வு ஏன்?
அரசுக்கு சொந்தமான மூன்று எண்ணெய் நிறுவனங்கள், கடந்த நிதியாண்டில் பெரும் லாபம் ஈட்டியுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்துவது ஏன்? தினசரி விலை நிர்ணயம் என்ற பெயரில் மக்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இது தான் சிறந்த நிர்வாகமா? மணீஷ் திவாரி லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
