தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மனிதாபிமானம் வேண்டும்!

மனிதாபிமானம் வேண்டும்!

மனிதாபிமானம் வேண்டும்!


UPDATED : ஜூலை 16, 2026 09:55 PM

ADDED : ஜூலை 16, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2026 09:55 PM ADDED : ஜூலை 16, 2026 08:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக்கோரி டில்லியில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம், 19ம் நாளை எட்டியுள்ளது. ஆனால், அவரிடம் மத்திய அரசு இதுவரை பேச்சு நடத்தவில்லை. அரசியலில், மனிதாபிமானத்திற்கும் கருணைக்கும் இடமளிக்க வேண்டும். அவருக்கு, அரசின் உறுதிமொழி தேவை. ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி

மக்களுக்காக போராடுவேன்!

தேர்தல் முடிவின்போது, பா.ஜ.,வினர் எனக்கு மரணம் நிகழ வேண்டும் என விரும்பினர். ஆனால், அவர்களின் வீழ்ச்சியை பார்க்கும் வரை நான் உயிருடன் இருப்பேன். யார் வேண்டுமானாலும் கட்சியில் இருந்து வெளியேறலாம்; எஞ்சியிருப்போரே என் உண்மையான சொத்து. சாமானிய மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன். மம்தா பானர்ஜி தலைவர், திரிணமுல் காங்., கட்சி

மறுபரிசீலிப்போம்!

பார்லி., கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை, எதிர்க்கட்சியினர் எதிர்ப்பர். ஆனால், எங்கள் பரிந்துரைகளை ஏற்று திருத்தங்களை செய்தால், 'இண்டி' கூட்டணி ஒன்றுகூடி ஆலோசித்து எங்களின் முடிவை மறுபரிசீலனை செய்வோம். ஆனால், அவர்கள் கொண்டு வருவார்களா என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி., சிவசேனா உத்தவ் பிரிவு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us