UPDATED : ஆக 01, 2026 10:18 PM
ADDED : ஆக 01, 2026 08:44 PM

ஜம்மு - காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. நாங்கள் மாநில அந்தஸ்து கோரும் போதெல்லாம், இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பது ஏன் என்று புரியவில்லை. இருவர் பலியான இந்த சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். பரூக் அப்துல்லா தலைவர், தேசிய மாநாட்டுக் கட்சி
ஒன்றுபட வேண்டும்!
அப்பாவி தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்படும்போது, அரசியல் தலைவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ஊகமான கருத்துகளை தெரிவிக்கவோ, குழப்பத்தை ஏற்படுத்தவோ கூடாது. இதை அரசியலாக்குவதை விட, பயங்கரவாதத்தை முறியடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ரவிந்தர் ராய்னா ஜம்மு - காஷ்மீர் பா.ஜ., தலைவர்
ஆதரிப்பது ஏன்?
பி.எம்., ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்த போது காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எதிர்த்தது. இப்போது, ஆளுங்கட்சியாக மாறிய பின் அந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பா.ஜ.,வுடன் நாங்கள் பேரம் பேசியதாக குற்றஞ்சாட்டிய காங்., இப்போது மட்டும் அத்திட்டத்தை ஆதரிப்பது ஏன்? பினராயி விஜயன் கேரள எதிர்க்கட்சித் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூ.,
