தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அதிக ஓட்டுப்பதிவு :சாதனை முறியடிப்பு!

அதிக ஓட்டுப்பதிவு :சாதனை முறியடிப்பு!

அதிக ஓட்டுப்பதிவு :சாதனை முறியடிப்பு!


UPDATED : ஆக 16, 2026 07:04 PM

ADDED : ஆக 16, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2026 07:04 PM ADDED : ஆக 16, 2026 06:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீஹாரில், வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் சட்டசபை தேர்தலில், ஓட்டுப்பதிவு அதிகரித்தது. இது, முந்தைய சாதனைகளையும் முறியடித்தது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஜனநாயக நாடுகளில் பதிவான ஓட்டுப்பதிவு அளவைவிட, இத்தேர்தலில் அதிக ஓட்டுப்பதிவு பதிவானது. ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் கமிஷனர்

என்ன உரிமை?

தெலுங்கானாவில் ரேஷன் கார்டுகளில் முதல்வர், அமைச்சரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதற்கு, 600 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவற்றை அச்சிட முதல்வருக்கு என்ன உரிமை உள்ளது? ஆனால், மத்திய அரசு சார்பில் அரிசியும், நிதியும் வழங்கும் நிலையில், பிரதமர் மோடியின் படம் இடம்பெறவில்லை. பண்டி சஞ்சய் குமார் மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,

வலுவிழக்க செய்யும்!

வந்தே மாதரம் பாடலை முழுதும் பாட எந்த சட்டப்பூர்வ கட்டாயமும் இல்லாத நிலையில், காங்கிரஸ் தலைமையகத்தில் அப்பாடல் முழுதும் பாடப்பட்டுள்ளது. இது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஹிந்துத்துவ கொள்கையை தழுவும் செயல். இந்த கொள்கை மாற்றம், மதச்சார்பற்ற சக்திகளின் கூட்டு முயற்சிகளை வலுவிழக்கச் செய்யும். பினராயி விஜயன் கேரள முன்னாள் முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us