UPDATED : ஆக 21, 2026 08:15 PM
ADDED : ஆக 21, 2026 08:12 PM
வந்தே மாதரம்' பாடலை முழுமையாக பாட காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது, அரசியலமைப்புக்கு முரணானது. பார்லி.,யில் நிறைவேற்றும் எந்தவொரு சட்டத்திற்கும் தனிமனிதர் ஒவ்வொருவரும் கட்டுப்பட்டவர். இது, சட்டத்திற்கு கீழ்படிய மறுக்கும் செயல். தேசியப் பாடலை மதிக்க மறுத்தால், அவரது தேசபக்தி மீதும் கேள்வி எழும். ராஜ்நாத் சிங் மத்திய அமைச்சர், பா.ஜ.,
ஓட்டுவங்கி அரசியல்!
'வந்தே மாதரம்' பாடலின் முழு வடிவத்தை, 1950ம் ஆண்டுக்கு பின் நடந்த தனிப்பட்ட அல்லது அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பா.ஜ.,வினர் பாடினார்களா? குஜராத் முதல்வராக மோடியோ அல்லது பிரதமராக வாஜ்பாயோ, அதன் முழு வடிவத்தையும் பாடினார்களா? அவ்வாறு பாடாத பா.ஜ., தலைவர்களும் தேசவிரோதிகளா? இது, ஓட்டுவங்கி அரசியலின் வெளிப்பாடு. கபில் சிபல் சுயேச்சை ராஜ்யசபா எம்.பி.,
இணைந்து செயல்படுகிறோம்!
நாடு முழுதும் விமானப் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்த, 'உடான்' எனப்படும், சிறுநகரங்களுக்கான விமான இணைப்பு திட்டத்திற்கு அடுத்த 10 ஆண்டுகளில், 28,840 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகிறோம். ராம் மோகன் நாயுடு மத்திய அமைச்சர், தெலுங்கு தேசம் கட்சி
