தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : செப் 03, 2026 08:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 08:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தப்பித்திருக்க முடியாது! மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வினர் பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டிருந்தால், சட்டசபை தேர்தலுக்குபின் திரிணமுல் காங்., கட்சியின் தலைவர்கள் யாரும் பாதிப்பின்றி தப்பித்திருக்க முடியாது. அவர்களின் கட்சி அலுவலகத்தில், மர்ம நபர்கள் அரங்கேற்றிய தாக்குதலை, உட்கட்சி பூசலாக தான் பார்க்க வேண்டும். சமிக் பட்டாச்சார்யா மேற்கு வங்க மாநில தலைவர், பா.ஜ.,

போராட்டம் நடத்துவோம்! திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்தால், டில்லியில் உள்ள பா.ஜ., தலைவர்களின் வீடுகளுக்கு முன் நாங்கள் போராட்டம் நடத்துவோம். எங்கள் கட்சி அலுவலகத்தின் மீதான இந்தத் தாக்குதல், மேற்கு வங்கத்தில் சீர்குலைந்து வரும் சட்டம் – ஒழுங்கு நிலையை வெளிப்படுத்துகிறது. மம்தா பானர்ஜி தலைவர், திரிணமுல் காங்கிரஸ் கட்சி

தனித்து போட்டி! உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் எங்கள் கட்சி இனி தனித்துப் போட்டியிடும். நாங்கள் எந்தவொரு கூட்டணியையோ, கட்சியையோ சார்ந்திருக்க மாட்டோம். ஒடுக்கப்பட்ட பிரிவினரை ஆளும் வர்க்கமாக மாற்றுவதே எங்கள் நோக்கம். இந்த இலக்கை அடைய, அதிகாரத்தை கைப்பற்றுவது அவசியம். மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us