ADDED : செப் 06, 2026 07:21 PM
செவிசாய்க்க வேண்டும்! மஹாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமைதியான முறையில் போராடி வருகின்றனர். இதற்கு, ஒட்டுமொத்த அமைப்பின் மீதான நம்பிக்கை தகர்ந்துபோனதே காரணம். மத்திய மற்றும் மாநிலத்தை ஆளும் பா.ஜ., அரசு, மாணவர்களின் குரலுக்கு உடனே செவிசாய்க்க வேண்டும். இல்லை எனில், அவர்களின் குரல் முழக்கம் மேலும் வலுக்கும். ராகுல் லோக்சபா எதிர்கட்சி தலைவர், காங்கிரஸ்
இருண்ட அத்தியாயம்! காங்கிரசின் சோனியா குடும்பம், எப்போதும் தன்னை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேலானதாக கருதுகிறது. அக்கட்சியின் செயல்பாடுகளால் நம் நாட்டில் ‘எமர்ஜென்சி’ எனும் இருண்ட அத்தியாயம் அரங்கேறியது. ராகுல், நம் நாட்டை அவமதிப்பதையும் சனாதனத்தை இகழ்வதையும் கைவிட்டால் தான் அவரை இளைஞர்கள் கவனிப்பர். அனுராக் தாக்கூர் லோக்சபா எம்.பி., பா.ஜ.,
பதவி விலகுங்கள்! தெலுங்கானாவில், 10 ஆண்டு முதல்வராக இருந்த பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், அனைத்து சலுகைகளை பெற்றும் சட்டசபைக்கு வராமல் உள்ளார். இது, மக்கள் பணத்தை வீணடிக்கும் செயல்; ஓர் அரசு ஊழியர் பணிக்கு வரவில்லை எனில், அவர் நீக்கப்படுவார். அது, இவருக்கும் பொருந்தும். பொன்னம் பிரபாகர் தெலுங்கானா மாநில அமைச்சர், காங்கிரஸ்
