UPDATED : செப் 11, 2026 09:03 PM
ADDED : செப் 11, 2026 09:02 PM
ஜம்மு - காஷ்மீர், ஈடு இணையற்ற இயற்கை சூழலை கொண்டுள்ளது. இங்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க சினிமா படப்பிடிப்பு தலமாக இருந்த நிலையை, திரைப்பட தயாரிப்பாளர்கள் மீட்டெடுக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமான இடமாக காஷ்மீர் மீண்டும் உருவெடுக்கும். எல்.முருகன் மத்திய இணையமைச்சர், பா.ஜ.,
விசாரணை தேவை!
மஹாராஷ்டிராவில் நடந்த வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் செயலர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும். அவர்கள் பதவி விலகவில்லை எனில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடையும். இந்த முறைகேடுகளை கண்டறிய நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும். ஆதித்யா தாக்கரே இளைஞரணி தலைவர், உத்தவ் சிவசேனா பிரிவு கட்சி
பழிவாங்கும் நடவடிக்கை!
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக எந்தவொரு உறுதியான வழக்கையும் அமலாக்கத்துறை பதிவு செய்யவில்லை. இந்தப் போக்கு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பினர், தற்போது புதிய கதைகளை உருவாக்குகின்றனர். இது, அரசியல் உள்நோக்கம் கொண்டது. பாலகோபால் முன்னாள் அமைச்சர், மா.கம்யூ., கட்சி
