UPDATED : செப் 12, 2026 11:11 PM
ADDED : செப் 12, 2026 08:11 PM
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முதல் ஓட்டு எண்ணிக்கை வரை ஒவ்வொரு நிலையிலும் சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், நம் நாட்டின் தேர்தல் நடைமுறை உலகின் மிக வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று. 18 வயதான இந்திய குடிமகனின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் கமிஷனர்
நேரத்தை வீணடிக்காதீர்!
இளைஞர்கள், சமூக ஊடகங்களில் தங்கள் நேரத்தை வீணடிக்காமல், பாடத்திட்டம் சார்ந்த புத்தகங்களை தாண்டி, பிற புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். படைப்பாற்றலையும், நல்ல சிந்தனைகளையும் ஊக்குவிக்கும் புத்தகங்களை வாங்கி, வீடுகளிலேயே நுாலகத்தை உருவாக்க வேண்டும். யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,
பட்டியலை வெளியிடுங்கள்!
காங்கிரசைச் சேர்ந்த கேரள முதல்வர் சதீசன், முந்தைய இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில், 787 தனிப்பட்ட பணியாளர்களை நியமித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். வெறும் குற்றஞ்சாட்டுகளை முன்வைப்பதற்கு பதிலாக, நியமிக்கப்பட்ட தனிப்பட்ட பணியாளர்களின் விபரங்களை பொதுவெளியில் அவர் வெளியிட வேண்டும். பினராயி விஜயன் கேரள முன்னாள் முதல்வர், மார்க்.கம்யூ.,
